Connect with us

ரெடியா நண்பா : இன்று மாலை வெளியாகிறது ‘தளபதி 68’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்..!!

Cinema News

ரெடியா நண்பா : இன்று மாலை வெளியாகிறது ‘தளபதி 68’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்..!!

தளபதி விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘தளபதி 68’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தளபதி விஜய் மற்றும் லோகேஷ் காம்போவில் லியோ என்ற சூப்பர் டூப்பர் ஹிட் படம் வெளியாகி தாறுமான வெற்றியை பெற்றுள்ள நிலையில் தற்போது தளபதி விஜய் இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் கைகோர்த்துள்ளார்.

தளபதி விஜய்யின் 68 ஆவது படமாக உருவாகும் இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் .

AGS நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் நவீன தொழில்நுட்பத்துடன் தயாராகி வரும் இப்படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வெளியிடப்படுவதால் ரசிகர்கள் ஏகபோகமாக உற்சாகத்தில் இருந்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு சிறப்பான தரமான அப்டேட்டை படகுக்கு வெளியிட்டுள்ளது.

அதன்படி வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜயன் நடிக்கும் ‘தளபதி 68’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என அழகிய போஸ்டர் மூலம் படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பொறுப்புடன் ஆடிய பெங்களூரு - ஹைதராபாத் அணிக்கு 207 ரன்கள் இலக்கு..!!!

More in Cinema News

To Top