Connect with us

நடுவானில் கணவன் – மனைவி இடையே நடந்த சண்டை : கணவனின் செயலால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

Featured

நடுவானில் கணவன் – மனைவி இடையே நடந்த சண்டை : கணவனின் செயலால் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

நடுவானில் கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட சண்டை ஒருகட்டத்தில் ,முற்றிபோக கணவனின் அருவருக்கத்தக்க செயலால் அவசர அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனியில் இருந்து பாங்காங் சென்ற விமானம் ஒன்றில் பயணம் மேற்கொண்ட கணவன் – மனைவி இடையே திடீரென பயங்கர சண்டை ஏற்பட்டுள்ளது . தலைக்கேறிய மதுபோதையில் மனைவியுடன் சண்டையிட்ட அந்த கணவரை, தடுக்க வந்த சக பயணிகளையும் வாய்க்கு வந்த படி அவதூறாக பேசியுள்ளார்.

சக பயணிகள் , விமான பணிப்பெண்கள் மற்றும் விமான பணியாளர்கள் எவ்ளவோ போராடியும் அந்த தம்பதிகளை கட்டுப்படுத்த முடியாததால் அனைவரும் செய்வதறியாது குழப்பத்தில் நின்றனர் . நேரம் ஆக ஆக கணவரின் செயல் மிகவும் அருவருக்கும்படி இருந்ததால் சீக்கிரம் இதற்கு தீர்வு காணும்படி சக பயணிகள் விமான பணிப்பெண்களுடன் முறையிட்டுள்ளனர்.

நேரம் கடந்தாலும் நிலைமை கட்டுக்குள் வராததால், விமானத்தை பாகிஸ்தானில் தரையிறக்க விமானி முயன்றுள்ளார். ஆனால் அங்கே அனுமதியில்லாததால், டெல்லியில் விமானத்தை அவசர அவசரமாக தரையிறக்கி கணவரை போலிசிடம் ஒப்படைத்துவிட்டு, அந்த விமானம் மீண்டும் பாங்காங் புறப்பட்டது சென்றது.

தலைக்கேறிய மதுபோதையில் மனைவியையும் சக பயணிகளையும் நடுவானில் வச்சு செய்த அந்த கணவரை தற்போது கைது செய்துள்ள போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Box Office Success 💥 | ‘Tere Ishq Mein’ Collects ₹152 Cr Worldwide 🎬

More in Featured

To Top