Connect with us

பாஜக அரசு மீது விவசாயிகள் நம்பிக்கை இழந்துவிட்டனர் – ராகுல் காந்தி எழுச்சி உரை

Featured

பாஜக அரசு மீது விவசாயிகள் நம்பிக்கை இழந்துவிட்டனர் – ராகுல் காந்தி எழுச்சி உரை

விவசாயிகளின் மனதில் உள்ள பயத்தை பீகார் அரசால் போக்க முடியவில்லை என்பதே உண்மை. பாஜக அரசு மீது விவசாயிகள் நம்பிக்கை இழந்துவிட்டனர் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தேசிய ஒற்றுமை நீதி யாத்திரையில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்தி தற்போது பீகாரில் இருக்கும் மக்களிடம் எழுச்சி உரையாற்றி வருகிறார்.

அப்போது அம்மாநிலத்தில் உள்ள விவசாயிகள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி கூறியதாவது :

அனைத்துத் திசைகளிலிருந்தும் விவசாயிகள் படையெடுத்து வருகின்றனர். உங்கள் நிலங்கள் பறிக்கப்பட்டு அதானி போன்ற பெரிய தொழில் அதிபர்களுக்கு பரிசாக வழங்கப்படுகிறது.

பிரதமர் மோடி 3 கறுப்புச் சட்டங்களைக் கொண்டு வர முயற்சித்தார், ஆனால் நாட்டின் அனைத்து விவசாயிகளும் அதற்கு எதிராக நின்றது பெருமைக்குரியது.

கோடீஸ்வரர்களின் 14 லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டாலும் விவசாயிகளின் கடன் தள்ளுபடி இன்னும் செய்யப்படவில்லை

விவசாயிகளின் மனதில் உள்ள பயத்தை பீகார் அரசால் போக்க முடியவில்லை என்பதே உண்மை. அரசு மீது விவசாயிகள் நம்பிக்கை இழந்துவிட்டனர் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மேயர் தேர்தலில் ஒட்டுமொத்த உலகமே பார்க்கும்படி அப்பட்டமாக ஜனநாயகத்தை கொன்ற பாஜக, தங்களது ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள எந்த எல்லை வரை செல்வார்கள் என கற்பனை கூட செய்ய முடியவில்லை.

பல ஆண்டுகளுக்கு முன்பு, காந்தியை கோட்சே கொன்ற நாளான இன்று, கோட்சேவின் வாரிசுகள் காந்தியின் கொள்கைகளையும் அரசியலமைப்பின் மாண்புகளையும் படுகொலை செய்துள்ளனர் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஸ்டாலின் – எடப்பாடி இடையேயான பெரிய வித்தியாசம்! 🔥 திமுகவில் பச்சை துரோகம் வெளிச்சம் – பிரபலத்தின் அதிரடி கருத்து!

More in Featured

To Top