Connect with us

பிரபல திரைப்பட இயக்குநர் தற்கொலை – சோகத்தில் மூழ்கிய தமிழ் திரையுலகம்..!!

Cinema News

பிரபல திரைப்பட இயக்குநர் தற்கொலை – சோகத்தில் மூழ்கிய தமிழ் திரையுலகம்..!!

பிரபல திரைப்பட இயக்குநர் ரவி ஷங்கர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் ‘வருஷமெல்லாம் வசந்தம்’ என்ற படத்தை இயக்கி திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்தவர் தான் இயக்குநர் ரவி ஷங்கர்.

மனோஜ், குணால் நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்று வசூல் ரீதியாவதும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியை தேடி தந்தது .

இதையடுத்து சரத்குமார் , தேவயானி நடிப்பில் வெளியான ‘சூர்யவம்சம்’ படத்தில் வந்த ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ உள்ளிட்ட பல ஹிட் பாடல்களையும் இயக்குநர் ரவி ஷங்கர் எழுதியுள்ளார்.

இந்நிலையில் சென்னையில் வசித்து வரும் இயக்குநர் ரவி ஷங்கர் நேற்றிரவு கே கே நகரில் உள்ள அவரது வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது .

இயக்குநர் ரவி ஷங்கரின் இந்த மறைவு செய்தி தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top