Connect with us

பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம் – சோகத்தில் திரையுலகம்..!!

Cinema News

பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம் – சோகத்தில் திரையுலகம்..!!

90களில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்த ஸ்ரீ கோபிநாத ராவ் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசனின் அசத்தலான நடிப்பில் கடந்த 1990இல் வெளியான திரைப்படம் மைக்கேல் மதன காமராஜன் . கமல்ஹாசனின் நடிப்பு திறமைக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்றுக்கொடுத்த இந்த படம் அவருடன் நடித்த ஊர்வசி, குஷ்பூ, நாகேஷ் மற்றும் பலருக்கும் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தில்கொடுத்தது .

இளையராஜாவின் மெல்லிசையில் உருவான இந்த படம் ஒரு முழுநீள நகைச்சுவைத் படம் என்பது அனைவர்க்கும் தெரியும் அதில் வரது குட்டி என்ற கதாபாத்திரம் கவனம் ஈர்த்தது .

அந்த கதாபாத்திரத்தில் நடித்த கிரேஸி கிரியேஷன்ஸின் குள்ள கோபி என்ற ஸ்ரீ கோபிநாத ராவ் தற்போது உடல்நலக்குறைவால் காலமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில நாட்களாக கோபிநாத ராவ் உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி காலமாகி உள்ளார் . நடிகர் ஸ்ரீ கோபிநாத ராவ் மறைவுக்கு திரையுலகினர் பலரும் தற்போது இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  வெண்ணிற ஆடையில் தாராள கவர்ச்சி காட்டிய நடிகை ஹன்சிகா - லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!!

More in Cinema News

To Top