Connect with us

“அதிரடி அறிவிப்பு! சுந்தர்.சி அடுத்த படம் விஷாலுடன் ரெடி!”

sundar c

Cinema News

“அதிரடி அறிவிப்பு! சுந்தர்.சி அடுத்த படம் விஷாலுடன் ரெடி!”

சுந்தர்.சி, ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தை முழுமைசெய்த உடனே, தனது அடுத்த இயக்கத்தை மிக வேகமாகத் தொடங்க தீர்மானித்துள்ளார். நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ தற்போது இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது, மேலும் அடுத்த ஆண்டு கோடை வெளியீடாக ரசிகர்கள் முன் வர திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய படமும் திடீரென ஸ்டார்ட் ஆகிறது. ஏசிஎஸ் நிறுவனத்துடன் விஷால் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 5-ம் தேதி சென்னையில் அதிகாரப்பூர்வமாக தொடங்கவுள்ளது. ப்ரோமோ ஷூட் ஏற்கனவே முடிந்து, டீம் ஃபூல்-ஸ்பீடில் பணிகளை முன்னெடுத்து வருகிறது.

sundar c (1)
sundar c (1)

குடும்ப உணர்வுகளும், மாஸ் ஆக்ஷனும் கலந்த இந்த படம் ஒரே கட்டமாகவே படமாக்கப்படும் என சொல்லப்படுகிறது. இதில் கதாநாயகியாக தமன்னா நடிக்கிறார்; இசையை ஹிப் ஹாப் தமிழா அமைக்கிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தனுஷ் ஒரு அசாதாரண கலைஞர்! ‘ஷமிதாப்’ அனுபவத்தை நினைவுகூர்ந்து அமிதாப் பச்சன் பாராட்டு

More in Cinema News

To Top