Connect with us

தேர்தல் வேலைகளை சரியாக செய்யாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்ட இ.பி.எஸ்

Featured

தேர்தல் வேலைகளை சரியாக செய்யாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்ட இ.பி.எஸ்

பூத் கமிட்டி அமைக்கும் பணியிலும் தேர்தல் சம்பந்தப்பட்ட பணியிலும் சுணக்கம் காட்டாமல் சரிவர வேலை செய்யாமல் இருக்கும் நிர்வாகிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

கட்சிகளின் பல செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்ட இக்கூட்டத்தில் தொண்டர்களுக்கும் பொறுப்பாளர்கள் மற்றும் செயலாளர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி பல விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் அறிவுறுத்தியுள்ளார்.

  • மாவட்டங்களில் கட்சி பொறுப்புகளில் சிறுபான்மையினருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்
  • சிறுபான்மையினர் சந்திக்கும் பிரச்னைகளுக்கு கட்சி சார்பில் குரல் கொடுக்க வேண்டும்
  • பூத் கமிட்டி அமைக்கும் பணிகளில் சுணக்கம் இருக்கக் கூடாது. இதை சரியாக செய்யாத நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்
  • டிசம்பர் 3-ம் தேதிக்குள் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை முடிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top