Connect with us

குடிமகன்களே இந்த செய்தி உங்களுக்கு தான் – மாசி மக பெருவிழாவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு..!!

Featured

குடிமகன்களே இந்த செய்தி உங்களுக்கு தான் – மாசி மக பெருவிழாவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு..!!

கும்பகோணத்தில் கோலாகலமாக நடைபெற இருக்கும் மாசி மக பெருவிழாவை முன்னிட்டு, நாளை நகரில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட தஞ்சை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

கும்பகோணம் நகர பகுதியில் மாசி மக திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளதால் கும்பகோணம் நகர பகுதியின் இயங்கி வரும் மதுபான கடைகளை தற்காலிகமாக மூட கோரி ஆர்.கனணன் என்பவர் சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டு தீர்புரை வரப்பெற்றது.

நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புரையில் இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியா அவர்கள் பரிசீலனை செய்து முடிவெடுத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பரிசீலனை செய்ததில் 24.02.2024 அன்று காலை முதல் மாலை 5.00 மணி வரை மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் தற்காலிகமாக மூடிட ஆணையிடப்படுகிறது என தஞ்சை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “Villain Role இல்ல!” 👀 | ‘Benz’ பட ரகசியத்தை உடைத்த Nivin Pauly 😮🔥

More in Featured

To Top