Connect with us

இந்தியாவில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் – செல்வப்பெருந்தகை அதிர்ச்சி தகவல்

Featured

இந்தியாவில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் – செல்வப்பெருந்தகை அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் இன்று ஏற்பட்டு உள்ளது என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

இதுகுறித்து செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :

உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் பகுதியில் பிரஜேஷ் பால் என்ற 25 வயது இளைஞர் வேலையில்லா திண்டாட்டத்தால் தற்கொலை செய்து கொண்டார்.

பிரஜேஷ் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் கல்லூரியில் தான் வாங்கிய அனைத்து பட்டங்களையும் எரித்துவிட்டார்.

அவர் தனது தற்கொலைக் குறிப்பில் எழுதியுள்ளார். ‘வேலை கொடுக்க முடியாத பட்டத்தால் என்ன பயன்? எங்கள் வாழ்நாளில் பாதி படிப்பிலேயே கழிந்தது. அதனால் இப்போது எங்கள் இதயம் கனத்திருக்கிறது.

45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் இன்று நாட்டில் உள்ளது. பல ஆண்டுகள் காத்திருந்து ஆட்சேர்ப்பு வந்தாலும், தேர்வுக்குரிய வினாத்தாள் கசிந்து விடுகின்றன.

உத்தரப்பிரதேசத்தில் இரட்டை இயந்திர அரசு தோல்வியடைந்துள்ளது, இளைஞர்கள் தங்கள் ‘நீதிக்கான உரிமை’க்காக இன்று வீதியில் இறங்கி உள்ளனர் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஜோடி ஆர் யூ ரெடி சீசன் 2 Title Winner யார் தெரியுமா?

More in Featured

To Top