Connect with us

டியூட் & பைசன் இந்த வாரம் OTT ரிலீஸ்! இரண்டுமே ஸ்ட்ரீமிங் ரெடி

Cinema News

டியூட் & பைசன் இந்த வாரம் OTT ரிலீஸ்! இரண்டுமே ஸ்ட்ரீமிங் ரெடி

ஓடிடியில் வெளியாகும் புதிய படங்கள், வெப் சீரிஸ்கள் குறித்து ரசிகர்கள் எப்போதும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அந்த வகையில், இந்த வாரம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கே தனி திருவிழா தான். தியேட்டர்களில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘டியூட்’ மற்றும் ‘பைசன்’ போன்ற ஹிட் படங்கள் இப்போது ஓடிடியில் வெளியாக உள்ளன.

இந்தியாவில் ஓடிடி பார்வையாளர்கள் கணிசமாக அதிகரித்து வருகின்றனர். தியேட்டருக்கு சென்று அதிகம் செலவு செய்யும் நிலையை விட, வீட்டிலிருந்தபடியே குறைந்த செலவில் படங்களையும், வெப் சீரிஸ்களையும் பார்க்கலாம் என்பதால் ஓடிடி அனைவரின் வீட்டிலும் அத்தியாவசியமாகிவிட்டது.

தமிழகத்தில் தியேட்டர்களில் வெளியான படங்கள் 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடியில் ஸ்ட்ரீம் செய்யப்பட வேண்டும் என்ற விதிமுறையும் சமீபத்திய தயாரிப்பாளர் சங்க கூட்டத்தில் மீண்டும் உறுதி செய்யப்பட்டது.

டியூட் (Amazon Prime Video) – நாளை முதல்

பிரதீப் ரங்கநாதன் – கீர்த்திஸ்வரன் இணைந்த உருவாக்கமான ‘டியூட்’, தீபாவளி வெளியீட்டில் மாபெரும் ப்ளாக்பஸ்டர் ஹிட்டாகியது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படத்துக்கு அபார வரவேற்பு கிடைத்தது.
100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்த இந்த ஹிட் படம் நாளை முதல் அமேசான் ப்ரைமில் ஸ்ட்ரீம் செய்யப்படுகிறது.

பைசன் (Netflix) – நவம்பர் 21 முதல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் நடித்த ‘பைசன்’ டியூட்டுக்கு போட்டியாக தீபாவளியில் வெளியானது. சமூக எச்சரிக்கை கொண்ட கதை அமைப்பு ரசிகர்களை கவர்ந்தது.
உலகளாவிய வசூல் 70 கோடி ரூபாயை தாண்டியதாக அதிகாரப்பூர்வ தகவல் வந்துள்ளது. இந்த படம் நவம்பர் 21 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top