Connect with us

ஏப்ரலில் வெளியாகும் Drishyam 3 – Mohanlal மீண்டும் மர்மத்துடன் திரும்புகிறார்! 🎬🔥

Cinema News

ஏப்ரலில் வெளியாகும் Drishyam 3 – Mohanlal மீண்டும் மர்மத்துடன் திரும்புகிறார்! 🎬🔥

மோகன்லால் நடித்த த்ரில்லர் தொடரின் அடுத்த அத்தியாயமான ‘த்ரிஷ்யம் 3’ திரைப்படம் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. படம் வருகிற ஏப்ரல் மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன், படத்தின் புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. போஸ்டரில் ஜார்ஜ்குட்டி கதாபாத்திரத்தின் அமைதியான முகபாவனை மற்றும் பின்னணியில் சஸ்பென்ஸை உணர்த்தும் தோற்றம், மூன்றாவது பாகம் மேலும் விறுவிறுப்பாக இருக்கும் என சுட்டிக்காட்டுகிறது.

முதல் இரண்டு பாகங்களும் எதிர்பாராத திருப்பங்களாலும், பரபரப்பான திரைக்கதையாலும் பெரும் வெற்றி பெற்ற நிலையில், ‘த்ரிஷ்யம் 3’ அதைவிட அதிகமான மர்மமும் திகிலும் கொண்டிருக்கும் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஏப்ரல் வெளியீட்டை முன்னிட்டு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கவுண்ட்டவுன் தொடங்கியுள்ள நிலையில், இந்த படம் மீண்டும் பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரைக்கதை ஜாம்பவான் கே. பாக்யராஜ் காலமானார்

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top