Connect with us

டிராகன் படத்தின் வெற்றி: இயக்குநர் ஷங்கர் என்ன கூறியுள்ளார்?

Featured

டிராகன் படத்தின் வெற்றி: இயக்குநர் ஷங்கர் என்ன கூறியுள்ளார்?

இளம் சென்சேஷனல் நடிகர்களில் ஒருவராக பிரதீப் ரங்கநாதன் வலம் வருகிறார். கோமாளி படத்துடன் இயக்குநராக அறிமுகமாகி, பின்னர் லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தவர் பிரதீப்.

கோமாளி படத்தின் வெற்றி இவருக்கு நல்ல இயக்குநர் என்ற பெயரையும், விருதுகளையும் கொடுத்தது. அதனை தொடர்ந்து, லவ் டுடே படத்தின் மூலம் இவர் ஹீரோவாக இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தார்.

இந்த படத்தின் வெற்றியுடன், இவர் நடிப்பில் LIK மற்றும் டிராகன் ஆகிய இரண்டு திரைப்படங்கள் உருவாகின. அதில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகிய டிராகன் படம் சில தினங்களுக்கு முன்பு வெளியானது மற்றும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், டிராகன் படத்தை பாராட்டி இயக்குநர் ஷங்கர் தமது ட்விட்டர் பக்கத்தில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். டிராகன் திரைப்படம் ஒரு அழகான படம். இப்படத்தை கொடுத்த இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவுக்கு Hats Off.

படத்தின் கடைசி 20 நிமிடங்கள் என் கண்ணில் கண்ணீர் விட்டு விட்டது. உலகத்திற்கு தேவையான கருத்துக்களை இந்த படத்தில் அற்புதமாக இயக்குநர் காட்டியுள்ளார்.”

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top