Connect with us

4 நாட்களில் வசூல் சாதனை செய்த ‘டிராகன்’ படம்!

Featured

4 நாட்களில் வசூல் சாதனை செய்த ‘டிராகன்’ படம்!

கடந்த வெளியான ‘டிராகன்’ திரைப்படத்தின் 4 நாட்கள் வசூல் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. இத்திரைப்படம் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான படம். ‘டிராகன்’ படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

‘லவ் டுடே’ படத்துக்கு பிறகு, பிரதீப் – ஏஜிஎஸ் கூட்டணியில் உருவான இரண்டாவது படமாக இதுவே இருக்கின்றது. இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயடு லொகர், மிஸ்கின், கவுதம் மேனன் ஆகிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

மேலும், யூடியூப் பிரபலங்கள் விஜே சித்து மற்றும் ஹர்ஷத் கான் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றி திரையரங்கை அதிர வைத்துள்ளனர். முக்கியமாக, ‘டிராகன்’ படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுவரை 4 நாட்களில் உலகளவில் ரூ. 59 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ள ‘டிராகன்’ படத்தின் வசூல், இந்த வார இறுதிக்குள் ரூ. 100 கோடிக்கு மேல் சென்று சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால், ‘லவ் டுடே’ படத்தின் வசூல் சாதனையை ‘டிராகன்’ படமே முறியடிக்கும்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top