Connect with us

சூரியின் கருடன் திரைப்படம் மொத்தமாக செய்த வசூல் எவ்ளோ தெரியுமா..? வெளியான டக்கர் தகவல்..!!

Cinema News

சூரியின் கருடன் திரைப்படம் மொத்தமாக செய்த வசூல் எவ்ளோ தெரியுமா..? வெளியான டக்கர் தகவல்..!!

எதார்த்த நாயகன் சூரியின் மிரட்டலான நடிப்பில் திரையரங்குகளில் வெளியான கருடன் திரைப்படம் இதுவரை மொத்தமாக செய்துள்ள வசூல் குறித்த அன்மை தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கால் பதித்து இன்று கதையின் நாயகனாக கலக்கி வருபவர் நடிகர் சூரி. இவரது நடப்பில் தற்போது உருவாகி உள்ள புதிய படம் கருடன் .

சூரி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நடிகரும் இயக்குநருமான சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இவர்களுடன் சமுத்திர கனி,உன்னிமுகுந்தன் ரேவதி சர்மா , ரோஷினி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படம் கடந்த மாதம் 31 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.

இப்படம் வெளியான நாள் முதல் நல்ல வசூலை பெற்று வந்த நிலையில் தற்போது இப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது .

அதன்படி கருடன் படம் இதுவரை மொத்தமாக ரூ. 56 கோடியும், தமிழகத்தில் மட்டுமே ரூ. 36.5 கோடியும் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கார்த்தி - அரவிந்த் சாமி காம்போவில் உருவாகி உள்ள மெய்யழகன் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்தது படக்குழு..!!

More in Cinema News

To Top