Connect with us

விக்னேஷ் சிவனுடன் புதிய படத்தில் கைகோர்த்துள்ள பிரதீப் ரங்கநாதனுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

Cinema News

விக்னேஷ் சிவனுடன் புதிய படத்தில் கைகோர்த்துள்ள பிரதீப் ரங்கநாதனுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி அனைவரையும் வாய் திறக்க வைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் கோமாளி என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன் முதல் பாலில் சிக்ஸர் அடித்தது போல் முதல் படத்திலேயே மக்களின் மனதில் தனக்கென தனி இடத்தை உருவாக்கி கொண்டார் .

இதையடுத்து இவரது இரண்டாவது படமான லவ் டுடே படத்தில் இவரே இயக்கி நடிக்கவும் செய்திதிருந்தார். மிக மிக குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்று 100 கோடி கலைக்சனையும் தாண்டி சாதனை படைத்தது .

இந்நிலையில் பிரதீப் நடிப்பில் உருவாகும் அடுத்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க உள்ளார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரதீபுக்கு ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடிக்க உள்ளார் . மேலும் இப்படத்தில் நடிப்பு அரக்கன் எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதெற்கெல்லாம் மேல் இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசை அமைக்கிறார்.

இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் குறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வரும் நிலையில் தற்போதைய தகவலாக படத்தில் நடிக்க நடிகர் பிரதீப் ரங்கநாதன் ரூ. 15 கோடி சம்பளமாக கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

படம் இயக்குவதிலும் நடிப்பதிலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள இவருக்கு இந்த கொடுக்கலாம் என்று ஒருபக்கம் கூறினாலும் 2ஆவது படத்திலேயே இவருக்கு இவ்ளோ சம்பளமா என ஆசிரியதுடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் கலக்கிய நடிகை மாளவிகா மோகனன் Viral Photos..

More in Cinema News

To Top