Connect with us

திரையரங்குகளில் திகிலூட்டும் டிமான்டி காலனி 2 – இதுவரை செய்த வசூல் எவ்ளோ தெரியுமா..?

Cinema News

திரையரங்குகளில் திகிலூட்டும் டிமான்டி காலனி 2 – இதுவரை செய்த வசூல் எவ்ளோ தெரியுமா..?

திரையரங்குகளில் திகில் பறக்க ஓடிக்கொண்டிருக்கும் அருள் நிதியின் டிமாண்டி காலனி 2 படத்தின் லேட்டஸ்ட் வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

திரில்லர் படங்களுக்கு பெயர் போன நடிகர் அருள் நிதியின் நடிப்பில் கடந்த 2015-ம் ஆண்டு புதிய வித ஹாரர் படமாக வெளியான திரைப்படமே ‘டிமாண்டி காலனி’ .

காட்சிக்கு காட்சி ஏராளமான ட்விஸ்டுகளும் பின்னணி இசையும் ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரவைத்ததது மட்டுமல்லாமல் வசூலிலும் இப்படம் பட்டய கிளப்பியது.

இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக உருவாகி வந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது .

முதல் பாகத்தை போலவே இப்படத்தில் நடிகர் அருள் நிதி சிறப்பான நடிப்பை வெளியிப்படுத்தி உள்ளார் அவருடன் இணைந்து பிரியா பவனி சங்கரும் கலக்கி உள்ளார் .

படம் ஆரம்பம் முதல் இறுதி வரை ஏராளமான பதற்றமான காட்சிகளுடன் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் சென்று ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் தற்போது இப்படத்தின் லேட்டஸ்ட் வசூல் குறித்த விவரம் வெளியாகி உள்ளது . அதன்படி, இப்படம் உலகளவில் 29 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கனமழை எதிரொலி : ஆந்திரா, தெலங்கானா மக்களுக்கு நடிகர் ராம் சரண் நிதியுதவி..!!

More in Cinema News

To Top