Connect with us

மீண்டும் மீண்டுமா : தமிழகத்தில் இன்று மற்றும் எத்தனை பேருக்கு கொரோன வந்துருக்கு தெரியுமா..? வெளியான ஷாக்கிங் தகவல்..

Featured

மீண்டும் மீண்டுமா : தமிழகத்தில் இன்று மற்றும் எத்தனை பேருக்கு கொரோன வந்துருக்கு தெரியுமா..? வெளியான ஷாக்கிங் தகவல்..

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

உலக மக்கள் அனைவரையும் கடந்த 4 வருடங்களாக படாதபாடு படுத்திய கொரோனா வைரஸ் தொற்று கோடான கோடி மக்களை பாரபட்சமின்றி வேட்டையாடியது. உலக நாடுகளை நடுங்கவைத்த கொரோனா இந்தியாவையும் விட்டுவைக்காமல் அங்கேயும் தலைவிரித்தாடியது . இங்கும் பல உயிர்களை கொன்று குவித்த இந்த பெருந்தொற்று இந்த வருடம் சற்று பம்மி இருந்த நிலையில் தற்போது மீண்டும் மெல்ல மெல்ல தலை காட்டி வருகிறது.

அந்தவகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக 21 நபர்கள் சென்னையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நேற்று ஒரேநாளில் புதிதாக 335 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இந்த தொற்று பாதிப்பால் தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,701-ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம், நேற்று ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top