Connect with us

அதர்வாவின் DNA – 8 நாட்கள் வசூல் விவரம் வெளியானது!

Uncategorized

அதர்வாவின் DNA – 8 நாட்கள் வசூல் விவரம் வெளியானது!

நடிகர் முரளியின் மகனாக தமிழ் திரைப்படத் துறையில் ஹீரோவாக அறிமுகமானவர் அதர்வா. பானா காத்தாடி படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் முதல் படமாக நடித்த இவர், ஈட்டி, இமைக்கா நொடிகள், கணிதன், பரதேசி போன்ற படங்களில் சிறப்பாக நடித்துள்ளார். இவை மூலம் ரசிகர்களிடம் பரிச்சயமாகி, நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளார்.

அதர்வா நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த திரைப்படம்தான் DNA. இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படத்தில் அதர்வாவுடன் நிமிஷா சஜயன், பாலாஜி சக்திவேல், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தயாரிப்புத் தரம், கதையின் தனித்தன்மை மற்றும் நடிப்புத் திறமையின் அடிப்படையில் DNA திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில், படம் வெளியான 8 நாட்களில் இந்த திரைப்படம் பெற்றுள்ள பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, DNA திரைப்படம் இதுவரை ரூ. 5 கோடி வரை வசூல் செய்துள்ளது. வருகிற நாட்களில் இப்படத்தின் வசூல் நிலை எப்படிப் பெயர்கிறது என்பதை பொறுத்திருந்து காணலாம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அடிதடியும் கலவரமும் சூழ்ந்த பிக் பாஸ் வீடு! திவாகர் நெஞ்சில் எட்டி மிதித்த விஜே பார்வதி!

More in Uncategorized

To Top