Connect with us

வீடு வீடாக பரப்புரையை தொடங்கும் திமுக – வெளியான லேட்டஸ்ட் தகவல்

Featured

வீடு வீடாக பரப்புரையை தொடங்கும் திமுக – வெளியான லேட்டஸ்ட் தகவல்

‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் தமிழகத்தில் உள்ள அணைத்து மாவட்டங்களிலும் வீடு வீடாக பரப்புரையை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .

தேர்தல் பணி தொடர்பாக திமுக மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், தொகுதி பார்வையாளர்களுடன் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்டார் .

இக்கூட்டத்தில் 72 மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், 234 தொகுதி பார்வையாளர்கள் மற்றும் முக்கியமான மாநில நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் காணொலி வாயிலாக பங்கேற்று உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது :

நமது கழகத்தின் உயர் பொறுப்பாளர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரையிலான அனைத்து விவரங்களையும் தலைமை கழகம் நன்கு அறிந்துள்ளது

மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு அரசியலிலும், கட்சியிலும் நிறைய மாற்றங்களை எதிர்பார்க்கலாம்

40 தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்வதே நமது முதற்கண் இலக்கு . வரும் 26ம் தேதி முதல் ‘இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்’ என்ற பரப்புரை வீடுவீடாக மேற்கொள்ள வேண்டும் இனத்தை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்

பாஜகவின் அநீதிகள் திமுக அரசின் சாதனைகள், தமிழ்நாடு பட்ஜெட்டின் சிறப்பம்சங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியது உங்களது கடமை என திமுக நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “மாநாடு நினைவுகள்… சுரேஷ் காமாட்சியை கண்கலங்க வைத்த உணர்ச்சி!”

More in Featured

To Top