Connect with us

நாளை முதல் தேமுதிக கொடிகள் வானுயர பறக்கவிட வேண்டும் -பிரேமலதா விஜயகாந்த்

Featured

நாளை முதல் தேமுதிக கொடிகள் வானுயர பறக்கவிட வேண்டும் -பிரேமலதா விஜயகாந்த்

நடிகரும் தேமுதிக தலைவருமான கேப்டன் விஜயகாந்தின் அவர்களின் மறைவால் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட தேமுதிக கொடிகளை நாளை முதல் முழு கம்பத்தில் பறக்கவிட வேண்டும் என பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் மறைவையொட்டி தமிழகம் முழுவதும் தேமுதிக கட்சி கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் நாளை 28.01.2024 ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் மாவட்டம், ஒன்றியம், தகரம், பகுதி, வட்டம், கிளை கழகம், கிராமங்கள் வரை உள்ள நமது தேமுதிக கழக கொடியினை ஏற்றி பட்டொளி வீசி பறக்க விட வேண்டுமென கழக நிர்வாகிகளையும், கழக தொண்டர்களையும் கேட்டுக்கொள்கிறேன் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் மரணம் அடைந்து நாளையுடன் ஒரு மாதம் ஆகப்போகிறது. நேற்று விஜயகாந்த் சமாதியில் அதிகம் பேர் திரண்டு அஞ்சலி செலுத்தி உள்ளனர்.

நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர் கேப்டன் விஜயகாந்த் சமாதியில் அஞ்சலி செலுத்தி இருப்பதாக அக்கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

இதுமட்டுமின்றி அஞ்சலி செலுத்த வருபவர்கள் பசியோடு செல்லக்கூடாது என்பதற்காக தினமும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வழங்கப்படும் அன்னதானத்தை பலரும் சாப்பிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top