Connect with us

“LEO படத்துக்கு பின் ‘கங்குவா’ படம் தான் இப்படி ஒரு டெக்னாலஜியில் ரிலீஸ்..!”

Cinema News

“LEO படத்துக்கு பின் ‘கங்குவா’ படம் தான் இப்படி ஒரு டெக்னாலஜியில் ரிலீஸ்..!”

தமிழ் திரை உலகை பொருத்தவரை ’பொன்னியின் செல்வன்’ மற்றும் ’லியோ’ படங்கள் ஐமாக்ஸ் தொழில்நுட்பத்தில் வெளியான நிலையில் அடுத்ததாக சூர்யா நடித்து வரும் ‘கங்குவா’ திரைப்படத்தையும் IMAX தொழில்நுட்பத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

‘கங்குவா’ படம் தமிழ் உள்பட 10 மொழிகளில் உருவாக உள்ளது என்பதும் பத்து மொழிகளுக்கான டப்பிங் பணிகள் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த படம் 3D டெக்னாலஜியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3D டெக்னாலஜி, 10 மொழிகள், IMAX தொழில்நுட்பம் என வேற லெவலில் இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் பிளாஷ்பேக் வரலாற்று காட்சிகள் பிரமாண்டமாக இருக்கும் என்றும் IMAX வர்ஷனில் இந்த படத்தை பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

சூர்யா மற்றும் சிறுத்தை சிவா இணைந்த இந்த படம் மிகப்பெரிய சாதனை படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. வரும் கோடை விடுமுறையில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில் இந்த படம் குறித்த அப்டேட்டுகள் அவ்வப்போது வெளிவர வாய்ப்புள்ளது. குறிப்பாக வரும் புத்தாண்டு தினத்தில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top