Connect with us

‘ஸ்டார்’ படத்தின் படப்பிடிப்புதள க்ளிக்கை பகிர்ந்து தரமான அப்டேட் கொடுத்த இயக்குநர்..!!

Cinema News

‘ஸ்டார்’ படத்தின் படப்பிடிப்புதள க்ளிக்கை பகிர்ந்து தரமான அப்டேட் கொடுத்த இயக்குநர்..!!

கவின் நடிப்பில் வேற லெவலில் உருவாகி வரும் ஸ்டார் படத்தின் படப்பிடிப்புதள புகைப்படத்தை வெளியிட்டு தரமான அப்டேட் ஒன்றையும் கொடுத்துள்ளார் அப்படத்தின் இயக்குநர்.

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையன் என்கிற கதாபாத்திரத்தில்ந் நடித்து பேமஸ் ஆனவர் கவின்.

இதையடுத்து நட்புனா என்னனு தெரியுமா என்கிற படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான கவினுக்கு, அப்படம் சுமாராக தான் போனது .

பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கி அதன்மூலம் கவினுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கவினுக்கு ஹீரோவாக நடிக்க ஏராளமான வாய்ப்புகள் வந்தது. அதில் சிறப்பான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து கவின் நடித்து வருகிறார் .

அதன்படி பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கவின் நடித்த முதல் திரைப்படம் லிஃப்ட். திகில் படமான இதில் கவினுக்கு அற்புதமான நடிப்பை வெளிப்படுத்த படமோ ஸசூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

லிஃப்ட் படத்தின் வெற்றிக்கு பின் கவின் நாயகனாக நடிக்க கமிட் ஆன திரைப்படம் டாடா. கணேஷ் கே பாபு என்கிற புதுமுக இயக்குனர் இயக்கியுள்ள இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக மலையாள நடிகை அபர்ணா தாஸ் நடித்தார் .

இந்த ஜோடி படத்தில் நடிப்பதை தாண்டி வாழ்ந்து காட்ட திரையரங்குகளில் இவர்களுக்கு விசில் பறந்தது.

இந்த படமும் கவினுக்கு மாபெரும் வெற்றியை தேடி தர தற்போது அடுத்தடுத்த படங்களில் கவின் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார் .

அந்தவகையில் கவினின் நடிப்பில் தற்போது விறுவிறுப்பாக உருவாகி வரும் திரைப்படம் தான் ஸ்டார். இயக்குனர் இளம் இயக்கி வரும் இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஏகபோக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ஏராளமா இளம் நட்சத்திரங்கள் நடித்து வரும் இப்படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்பு தொல்லை செய்து வந்த நிலையில் தற்போது அப்படத்தின் இயக்குனர் சிறப்பான தரப்பான அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.

“3 வருடங்களுக்கு முன்பு நான் நினைத்த ஒரு காட்சியை, இன்று வெற்றிகரமாக படமாக்கியுள்ளேன். இது இடைவேளைக்கு பிறகு வரும் முதல் காட்சி” என படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த ‘ஸ்டார்’ பட இயக்குநர் இளன் ஒரு உணர்ச்சிகரமாக செய்தியை பகிர்ந்துள்ளார்.

More in Cinema News

To Top