Connect with us

விஜய் சேதுபதியின் Merry Christmas படத்துக்கு வித்தியாசமாக விமர்சனம் கொடுத்த இயக்குனர் பார்த்திபன்!

Cinema News

விஜய் சேதுபதியின் Merry Christmas படத்துக்கு வித்தியாசமாக விமர்சனம் கொடுத்த இயக்குனர் பார்த்திபன்!

நடிகர் விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு இந்தி என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில் ஷாருக்கானுடன் பாலிவுட்டில் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருந்த ஜவான் படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றுத் தந்தது. படம் 1000 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்து மாஸ் காட்டியுள்ளது. படம் இயக்குநர் அட்லீக்கும் இசையமைப்பாளர் அனிருத்துக்கும்கூட பாலிவுட்டில் சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து கேத்ரினா கையிப்புடன் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள மெர்ரி கிறிஸ்துமஸ் படம் பொங்கலையொட்டி நாளைய தினம் ரிலீசாகவுள்ளது.

தமிழ் மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் ரொமாண்டிக் திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளது. திரில்லர் படங்களுக்கு பெயர்போன பிரபல இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். தமிழராக இருந்தாலும் பாலிவுட்டில் தன்னுடைய சிறப்பை வெளிப்படுத்திவரும் ஸ்ரீராம் ராகவன், இயக்கத்தில் வெளியாகும் முதல் தமிழ் படம் என்பதால் இந்தப் படத்திற்கு அதிகமாக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. மேலும் விஜய் சேதுபதி மற்றும் கேத்ரினா கையிப்பின் கெமிஸ்ட்ரி இந்தப் படத்தில் சிறப்பாக வொர்க் அவுட் ஆகியுள்ளதாக ரசிகர்கள் உற்சாகம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பிரபல இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் மெர்ரி கிறிஸ்துமஸ் குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். அதே கண்கள் என்ற படம் 60களில் வெளியானபோது, இந்தப் படத்தின் கிளைமேக்சை வெளியில் யாரிடமும் சொல்லாதீர்கள் என்று கோரிக்கை வைக்கப்பட்டதை சுட்டிக் காட்டிய பார்த்திபன், அப்படியான கோரிக்கை மெர்ரி கிறிஸ்துமசில் நேற்று வைக்கப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டுள்ளார். நாவலை தழுவி கதையும் கேத்ரினாவை தழுவியபடி நம்முடைய விஜய் சேதுபதியும் என்று நையாண்டி செய்துள்ளார்.

மேலும் லிப்ட் இடைவெளியிலும் லிப்ஸ் இடைவெளியிலும் இருவர் கண்களும் ஸ்கிரீன் ப்ளே எழுதியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உண்மையிலேயே ஸ்கிரீனிலும் பிரில்லியன்ட் ஸ்கிரீன்ப்ளே இருப்பதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார். குறிப்பாக க்ளைமாக்சில் வார்த்தைகள் இன்றி பிஜிஎம் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இயக்குர் ஸ்ரீராம் ராகவனுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் தான் கேத்ரினாவை பார்க்காமல் விஜய் சேதுபதியையே பார்த்துக் கொண்டிருந்ததால், இறுதியாக வடநாட்டிலும் நாட்றார்ம்மா வெற்றிக் கொடியை என்று கேத்ரினாவிடம் தமிழில் கூறிக் கொண்டிருந்ததாகவும் குறிப்பிட்டு கேத்ரினாவுடன் தான் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top