Connect with us

நடுரோட்டில் காரை நிறுத்தி வாக்குவாதத்தில் இறங்கிய இயக்குநர் சேரன் – கடலூரில் நடந்த காரசார சம்பவம்..!!

Cinema News

நடுரோட்டில் காரை நிறுத்தி வாக்குவாதத்தில் இறங்கிய இயக்குநர் சேரன் – கடலூரில் நடந்த காரசார சம்பவம்..!!

கடலூரில் உள்ள முக்கிய சாலையின் நடுவே காரை நிறுத்தி இயக்குநர் சேரன் வாக்குவாதத்தில் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் சேரன் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ள இவர் கடந்த 2 நாட்களுக்கு முன் காரில் கடலூருக்கு சென்றுள்ளார் அப்போது பின்னல் வந்த பேருந்து தொடர்ந்து ஹாரன் அடித்ததால் கடுப்பான இயக்குநர் சேரன். நடுரோட்டில் காரை நிறுத்தி வாக்குவாதம் செய்துள்ளார்.

இச்சம்பவத்தையடுத்து, கடலூரில் இயங்கும் 20க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளில் ஏர் ஹாரன் பயன்படுத்தப்பட்டதாக கூறி அப்பகுதி போலீசார் ஒவ்வொரு பேருந்துக்கும் தலா ₹10,000 அபராதம் விதித்தனர் .

பயணிகளுடன் வந்த பேருந்தை இயக்குநர் சேரன் நடுவழியில் நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டது தவறு என்றும், காவல்துறையிடம் புகார் அளிக்காமல் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்ட அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் கடலூர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.

2 நாட்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை போலீஸிடம் ஒப்படைத்து, சேரன் மீது தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் புகார் அளித்துள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழிசை விமர்சனத்தால் என் மனம் புண்படாதா..? - திருமாவளவன்

More in Cinema News

To Top