Connect with us

“இதுவே சுதந்திரம்” பெண்கள் பாதுகாப்பு குறித்து இயக்குநர் அட்லீ போட்ட நெகிழ வைக்கும் பதிவு..!!

Cinema News

“இதுவே சுதந்திரம்” பெண்கள் பாதுகாப்பு குறித்து இயக்குநர் அட்லீ போட்ட நெகிழ வைக்கும் பதிவு..!!

இந்திய திருநாட்டின் 78வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் இயக்குநர் அட்லீ போட்டுள்ள ட்விட்டர் பதிவு தற்போது செம வைரலாக வலம் வருகிறது.

உலகின் அதிக மக்கள் தொகைக்கொண்ட நம் நாட்டின் வளர்ச்சி நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டிருக்கும் அதே நேரத்தில் பெண்கள் பாதுகாப்பு , தனிமனிதர் சுதந்திரம் மனிதாபிமானம் உள்ளிட்டவை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.

தினம் தினம் அரங்கேறும் கொலை கொள்ளைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் சீண்டல் உள்ளிட்டவைகளால் எப்போதும் பயத்துடனே வாழும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இந்திய சுதந்திரம் வாங்கி இன்றோடு 78 ஆண்டுகள் ஆகும் நிலையில் இன்னும் பல இடங்களில் சுதந்திரம் இன்றி அடுக்குமுறையும் பாலியல் சீண்டகளும் அதிகரித்து தான் காணப்படுகிறது.

இந்நிலையில் நம் நாட்டின் 78வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் இயக்குநர் அட்லீ போட்டுள்ள ட்விட்டர் பதிவு தற்போது செம வைரலாக வலம் வருகிறது.

எப்போது ஒரு பெண் சுதந்திரமாக சாலையில் நடமாடுகிறாளோ அப்போது இந்தியா சுதந்திரம் அடைந்தது என்று சொல்லலாம் என மகாத்மா காந்தியின் வரிகளை பதிவிட்டு, இரு பெண்கள் மெழுகுவர்த்தி ஏந்திச்செல்லும் வகையில் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

அட்லீ போட்டுள்ள இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top