Connect with us

துருவ நட்சத்திரம் படத்தை வேண்டாம் என சொல்லிய நடிகர்கள்…கடைசியில் தான் இவர்!

Cinema News

துருவ நட்சத்திரம் படத்தை வேண்டாம் என சொல்லிய நடிகர்கள்…கடைசியில் தான் இவர்!

Spy Thriller கதை பாணியில் உருவாகியுள்ள படம் தான் துருவ நட்சத்திரம்..இந்த படத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ளார் கௌதம் வாசுதேவ் மேனன் இப்படத்தை இயக்கியுள்ளார்….இந்த படத்தின் கதை குறித்த பணிகள் 2012-ஆம் ஆண்டே தொடங்கி விட்டது…பலரும் இப்படத்தை அதிகம் எதிர்பார்த்து வருகின்றனர்…

இப்படத்தை முதலில் சூர்யாவை வைத்து படமாக்க இருந்தார் கௌதம் மேனன் அதன் பிறகுதான் விக்ரம் ஹீரோவாக்கப்பட்டார் என்றும் தகவல் வந்தது…கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கும் மேலாக இப்படத்தின் பணிகள் நடைப்பெற்று வந்தது…

துருவ நட்சத்திரம் படத்திற்காக ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்துக்கொண்டிருந்தனர்…இந்த நிலையில் சமீபத்தில் டிரைலர் வந்து ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஆகியது…டிரைலரில் இடம் பெற்றுள்ள சண்டை காட்சிகளும், விகரம் மாஸாக விமானத்தில் இருந்து இறங்கும் காட்சியும் ரசிகர்களை பெரிதும் ஈர்த்துள்ளது.

துருவ நட்சத்திரம் படத்தில் நடிகர் பார்த்திபன் முக்கிய கதாப்பாத்திரமாக வருகிறார் அவரே வில்லன் ஆக கூட இருக்கலாம் என தெரிகிறது…இன்னும் பலரின் பெயரும் அடிப்பட்டு வருகின்றது..

விக்ரமிற்கு ஜோடியாக ரிது வர்மா நடித்துள்ளார்.மேலும், அரசுக்கு கீழ் இயங்காத குழுவாக ராதிகா,மாயா, சிம்ரன், டிடி, டான்ஸ் மாஸ்டர் சதீஷ், வம்சி கிருஷ்ணா உள்ளிட்ட பலர் உள்ளனர்.அதனை போல் துருவ நட்சத்திரம் திரைப்படம் வரும் நவம்பர் மாதம் 24ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய கௌதம் மேனன் துருவ நட்சத்திரம் படத்தின் கதையை முதலில் சூர்யாவிடம் சொன்னேன் ஆனால் சில காரணத்தால் அவர் நிராகரித்துவிட்டார்..அது எங்களுக்கு சரியாகவும் அமையாமல் போனது…

இதையடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் அவர்களிடம் இந்த கதையை சொன்னேன் அவர் இந்த கதையை ரொம்பவும் ரசித்தார்….அவருக்கு இந்த கதை பிடித்து இருந்தது ஆனால் அவரால் சில காரணங்களால் படத்தில் நடிக்க முடியவில்லை.அது எனக்கு மிக பெரிய வருத்தம் தான்..கபாலி பண்ணாவிட்டால் இது நடந்து இருக்கும்…அதன் பிறகு கடைசியாக விக்ரம் இந்த கதைக்கு சரி என்று சொல்லியிருந்தார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  இளையராஜா - அமைச்சர் அன்பில் மகேஷ் சந்திப்பு - காரணம் என்ன தெரியுமா..?

More in Cinema News

To Top