Connect with us

துருவ நட்சத்திரம் படத்திற்கு இதுதான் இப்போது உள்ள நிலை…Latest தகவல்!

Cinema News

துருவ நட்சத்திரம் படத்திற்கு இதுதான் இப்போது உள்ள நிலை…Latest தகவல்!

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து இருக்கும் துருவ நட்சத்திரம் படம் பல வருடமாக தாமதமாகவருகிறது…ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் பல முறை தள்ளிப்போய் இருக்கிறது…இப்படி ஒரு மோசமான நிலை தான் இருந்து வருகின்றது..

நவம்பர் 24 – நாளை துருவ நட்ச்சத்திரம் ரிலீஸ் என அறிவிக்கப்பட்டு ப்ரோமோஷன் பணிகள் நடைபெற்று வந்தது..ஆனால் நிறைய பிரச்சனைகள் இருந்தும் வருகின்றது..படம் வருமா வராதா என நிறைய சர்ச்சைகள் இன்றும் நடந்து வருகின்றது…

இதனை பற்றி நீதிமன்றம் அளித்த தீர்ப்பு தற்போது சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது…ஆல் இன் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்திடம் கௌதம் மேனன் வாங்கிய 2.5 கோடி ரூபாய் பணத்தை கௌதம் மேனன் நாளை காலை 10.30 மணிக்குள் தரவில்லை என்றால் துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்ய கூடாது என நீதிமன்றம் கூறி இருக்கிறது…இதனால் என்னை நோக்கி பாயும் தோட்ட கதை தான் இருக்கின்றது என தெரிகின்றது..

அதனால் துருவ நட்சத்திரம் வருமா வராதா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது…இப்படி இருக்கும் நிலையில் தற்போது ஒன்றாகா என்டர்டைன்மெண்ட் நிறுவனம் ரிலீஸ் பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது…அதன் படி நாளை நிச்சயம் துருவ நட்சத்திரம் ரிலீஸ் ஆகும் என போஸ்டர் உடன் சற்றுமுன் அறிவித்து இருக்கின்றனர்…இப்படி சொல்வதால் நிச்சயம் வரும் என ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியானது..!!!

More in Cinema News

To Top