Connect with us

மீண்டும் தள்ளிப்போன ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ் – ரசிகர்களிடம் மனம் விட்டு மன்னிப்பு கேட்ட GVM

Cinema News

மீண்டும் தள்ளிப்போன ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ் – ரசிகர்களிடம் மனம் விட்டு மன்னிப்பு கேட்ட GVM

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து இருக்கும் துருவ நட்சத்திரம் படம் திரையரங்குகளில் இன்று கோலாகலமாக வெளியாக இருந்த நிலையில் இப்படம் நினைத்தது போல் இன்று வெளியாகாது ரசிகர்களை ஏமாற்றியதற்கு மன்னிப்பு கேட்கிறோம் என இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

நவம்பர் 24 ஆம் தேதி அதாவது இன்று துருவ நட்ச்சத்திரம் கட்டாயம் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இப்படம் இன்று வெளியாகாமல் மீண்டும் தள்ளிப்போயுள்ளது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது .

இப்படம் ஆரம்பித்த நாள் முதல் பிரச்சனை மேல் பிரச்சனைகளை சந்தித்த படக்குழு எப்படியும் இப்படம் இந்த வருடம் ரிலீஸ் ஆகிவிடும் என்ற நம்பிக்கையில் இருந்தனர் ரசிகர்களும் அதே நம்பிக்கையில் ஆர்வமாக இருந்தனர்.

இந்நிலையில் ஆல் இன் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்திடம் கௌதம் மேனன் வாங்கிய 2.5 கோடி ரூபாய் பணத்தை கௌதம் மேனன் நாளை காலை 10.30 மணிக்குள் தரவில்லை என்றால் துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்ய கூடாது என நீதிமன்றம் ஸ்ட்ரிக்டாக கூறிவிட்டது.

இதனால் கடுமையான நெருக்கடிக்கு தள்ளப்பட்ட கௌதம் மேனன் வேறு வெளியின்றி துருவ நட்சத்திரம் படம் இன்று திரையிடப்படவில்லை என்ற செய்தியை வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ள கௌதம் மேனன் கூறியதாவது :

‘மன்னிக்கவும். ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் இன்று திரைக்கு வரவில்லை. எங்களால் முடிந்தவரை முயற்சி செய்தோம். ஆனால் படத்தை திரையிட இன்னும் ஓரிரு நாட்கள் தேவைப்படுகிறது;

உலகெங்கிலும் முறையான முன்பதிவுகள் மற்றும் சரியான திரையிடல்கள் மூலம் உங்கள் அனைவருக்கும் நல்ல அனுபவத்தை தர விரும்புகிறோம்

இந்த திரைப்படத்திற்கான உங்களின் ஆதரவு எங்களை நெகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது. அது எங்களை மேலும் தொடர வைக்கிறது. இன்னும் சில நாட்களில் நாங்கள் மீண்டும் வருவோம் என தனது ட்விட்டர் பதிவில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சூரியின் கருடன் பட ரிலீஸ் குறித்து வெளியான டக்கர் அப்டேட்..!!

More in Cinema News

To Top