Connect with us

“தனுஷின் Captain Miller படத்திற்கு கிடைத்த Censor சான்றிதழ் குறித்த அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!”

Cinema News

“தனுஷின் Captain Miller படத்திற்கு கிடைத்த Censor சான்றிதழ் குறித்த அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!”

நடிகர் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் கேப்டன் மில்லர். திருச்சிற்றம்பலம், வாத்தி என அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்துள்ள தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள இநத்ப் படத்தை இயக்கியுள்ளார் அருண் மாதேஸ்வரன். இந்தப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பொங்கல் கொண்டாட்டமாக படம் வெளியாகவுள்ளது.

முன்னதாக படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் ஆகியவற்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில் வித்தியாசமான கெட்டப்புகளில் தனுஷை பார்க்க முடிந்தது. படத்தின் டீசரில் சிவராஜ்குமாரும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் படத்தில் அவர் தனுஷின் அண்ணனாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. சுதந்திர போராட்ட காலகட்டத்தை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்துள்ள நிலையில் தனுஷ், நீண்ட தலைமுடி, தாடி, மீசையுடன் வித்தியாசமான கெட்டப்பில் ரசிகர்களை ஈர்த்துள்ளார்.

இந்தப் படத்தின் இசை வெளியீடு ஜனவரி முதல் வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் ரிலீசுக்கு முந்தைய வியாபாரமும் 100 கோடி ரூபாய்களை கடந்துள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படம் பொங்கலையொட்டி வரும் ஜனவரி 12ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகவுள்ளதாக தற்போது படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் சென்சாரும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும் படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் புதிய போஸ்டருடன் இந்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் GV பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில் படத்தில் பேக்கிரவுண்ட் இசை மிகவும் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் ஆயிரத்தில் ஒருவன் படத்தை ஆண்டுகள் தாண்டி ரசிகர்கள் கொண்டாடுவது போல கேப்டன் மில்லர் படத்தையும் ஆண்டுகள் கழிந்தும் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று அவர் தனது சமீபத்திய பேட்டியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  விரைவில் வெந்து தணிந்தது காடு 2ம் பாகம் - தயாரிப்பாளர் கொடுத்த டக்கர் அப்டேட்..!!

More in Cinema News

To Top