Connect with us

அதிகரிக்கும் கோடை வெப்பம் – சிறப்பு வகுப்புகள் எடுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை..!!!

Featured

அதிகரிக்கும் கோடை வெப்பம் – சிறப்பு வகுப்புகள் எடுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை..!!!

கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில் சிறப்பு வகுப்புகளைக் கட்டாயம் நடத்தக்கூடாது என்றும் மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை கூறிருப்பதாவது :

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் வணக்கம்.

தமிழக அரசு கோடை விடுமுறை அனைத்துப் பள்ளிகளுக்கும் அறிவித்தப் பின்னரும் பல்வேறு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

கடுமையான வெப்பம் நிலவும் இக்காலத்தில் கட்டாயமாக சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று தங்களது ஆளுகைக்குட்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மீறி சிறப்பு வகுப்புகள் எடுக்கும் பள்ளிகளின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.இதில் அனைத்துக் கல்வி அலுவலர்களும் சிறப்புக் கவனம் செலுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “வலுவான கதையுடன் மீண்டும் சமுத்திரகனி – ZEE5-ல் வரும் ‘தடயம்’”

More in Featured

To Top