Connect with us

போடு தகிட தகிட : அருள் நிதி நடிப்பில் உருவாகி வரும் ‘டிமான்டி காலனி 2’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி வெளியானது..!!

Cinema News

போடு தகிட தகிட : அருள் நிதி நடிப்பில் உருவாகி வரும் ‘டிமான்டி காலனி 2’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதி வெளியானது..!!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள் நிதி நடிப்பில் உருவாகி வரும் ‘டிமான்டி காலனி 2’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் துடிப்பான நடிகர் என்ற பெயரெடுத்த நடிகர் அருள்நிதி நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவான படம் ‘டிமாண்டி காலனி’ , கடந்த 2015-ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் மக்களின் அமோக வரவேற்பை பெற்று சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது .

மிரட்டலான அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் 8 வருடங்களுக்குப்பின், தற்போது உருவாகி உள்ளது . முதல் பாகம் போல் இந்தப் படத்திலும் அருள்நிதி கதாநாயகனாக நடிக்க . அஜய் ஞானமுத்து தயாரிக்க, அவரிடம் உதவி இயக்குனராக இருந்த வெங்கி வேணுகோபால் தான் இரண்டாம் பாகத்தை இயக்கி உள்ளார்.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்து இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது . இந்நிலையில் இப்படத்தில் இருந்து அப்டேட் வேண்டும் என்று விடாமல் கேட்டு கொண்டிருந்த ரசிகர்களுக்கு தற்போது தாறுமாறான அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி ரசிகர்களின் மிக பெரிய எதிர்பார்ப்புக்கிடையே உருவாகி உள்ள ‘டிமான்டி காலனி-2’ படத்தின் ட்ரெய்லர் வரும் 16ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஆன்லைன் சூதாட்டத்தால் 6 மாதங்களில் 8 பேர் பலி - உடனடி நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்..!!

More in Cinema News

To Top