Connect with us

“விஜய்சேதுபதிக்கும், மஞ்சுவாரியருக்கும் புது Technology Shoot..! இயக்குனர் வெற்றிமாறனின் விடுதலை Part 2வில் இப்படி ஒரு காட்சியா?!”

Celebrities

“விஜய்சேதுபதிக்கும், மஞ்சுவாரியருக்கும் புது Technology Shoot..! இயக்குனர் வெற்றிமாறனின் விடுதலை Part 2வில் இப்படி ஒரு காட்சியா?!”

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடித்த ’விடுதலை’ படம் கடந்த ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்க உள்ளதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

இருவரும் கணவன் மனைவியாக நடிக்க உள்ள நிலையில் பிளாஷ்பேக் காட்சிகள் இந்த படத்தில் இடம்பெறுவதாகவும் அது 1960 ஆம் ஆண்டு நடைபெற்ற காட்சிகளாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பிளாஷ்பேக் காட்சிகளில் விஜய் சேதுபதி மற்றும் மஞ்சு வாரியர் ஆகிய இருவரையும் இளமையாக காண்பிக்க வேண்டும் என்பதற்காக DE Aging என்ற புதிய டெக்னாலஜியை வெற்றிமாறன் பயன்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

இதனால் விஜய் சேதுபதி – மஞ்சு வாரியர் பிளாஷ்பேக் காட்சிகள் அசத்தலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ’விடுதலை 2’ படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, மஞ்சு வாரியர், பிரகாஷ்ராஜ், கௌதம் மேனன், ராஜீவ் மேனன், இளவரசு, பாலாஜி சக்திவேல், சரவண சுப்பையா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த படம் ஜெயமோகன் வசனத்தில், வெற்றிமாறன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில், ஆர் வேல்ராஜ் ஒளிப்பதிவில், ராமர் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திருச்செந்தூர் கோயிலில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி சாமி தரிசனம்..!!

More in Celebrities

To Top