Connect with us

யார் என்று தெரிகிறதா இவர் தீ என்றே புரிகிறதா – ஜடேஜாவை வரவேற்று புதிய வீடியோ வெளியிட்ட CSK..!!

Featured

யார் என்று தெரிகிறதா இவர் தீ என்றே புரிகிறதா – ஜடேஜாவை வரவேற்று புதிய வீடியோ வெளியிட்ட CSK..!!

2024ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக சென்னை வந்தடைந்துள்ள CSK அணியின் நட்சத்திர வீரரான ஜடேஜாவுக்கு CSK நிர்வாகம் அட்டகாசமான வீடியோ உடன் வரவேற்றுள்ளது.

நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் 22 ஆம் தேதி சென்னையில் உள்ள உலக புகழ் பெற்ற சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கோலாகலமாக தொடங்க உள்ளது .

முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணியை பெங்களூரு அணி எதிர்கொள்ள உள்ளது.இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தங்களை ஆயுத்தபடுத்தி வருகின்றனர்.

இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாட அணைத்து அணிகளும் பயிற்சினை மேற்கொண்டுள்ள நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பயிற்சியை மேற்கொள்ள சென்னை வந்தடைந்தது .

சென்னை அணியின் கேப்டனான எம்.எஸ் தோனியும் அம்பணி குடும்பத்தின் திருமண விழாவை முடித்த கையோடு சென்னைக்கு தற்போது அணியுடன் பயிற்சியை தொடங்கி உள்ளார்.

இந்நிலையில் சென்னை அணியுடன் இணைய இன்று சென்னை வந்தடைந்துள்ளார் அந்த அணியின் நட்சத்திர வீரரான ஜடேஜா . அவரை சாதாரணமாக வரவேற்காமல் சென்னை அணி நிர்வாகம் அவருக்கென என்ட்ரி வீடியோவை வெளியிட்டு அவரை குஷி படுத்தியுள்ளது.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஜனநாயகன் வழக்கு இன்று பிற்பகல் மீளாய்வு – பொங்கல் ரேஸில் பரபரப்பு

More in Featured

To Top