Connect with us

சோகத்தில் ரசிகர்கள் – ஐபிஎல் தொடரில் இருந்து CSK வீரர் பத்திரானா விலகல்..!!

Featured

சோகத்தில் ரசிகர்கள் – ஐபிஎல் தொடரில் இருந்து CSK வீரர் பத்திரானா விலகல்..!!

நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான பத்திரானா விலகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இந்நிலையில் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் அணைத்து அணிகளும் புள்ளிப்பட்டியலில் முன்னேறவும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறவும் போராடி வருகிறது.

இதில் இந்த தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வி வெற்றி என மாறி மாறி விளையாடி வந்தாலும் புள்ளிப்பட்டியலில் தற்போது 3 ஆம் இடத்தில் கெத்தாக உள்ளது.

இதுவரை 11 போட்டியில் விளையாடி உள்ள CSK அணி 6 வெற்றி 5 தோல்விகளை பெற்றுள்ளது . இந்நிலையில் CSK அணியில் நட்சத்திர வீரர்களான கான்வே உள்ளிட்ட சில வீரர்கள் தொடரில் விளையாடாமல் இருப்பது அணிக்கு சற்று பின்னடைவாக இருந்தாலும் தட்டுத்தடுமாறி தங்களால் முடிந்ததை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான பத்திரானா நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

பயிற்சியின் போது தொடை பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்படும் பத்திரானா தற்போது விளையாட முடியாத சூழலில் இருப்பதால் தொடரில் இருந்து விலகி இருப்பதாக CSK அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  Pradeep Ranganathan படத்தில் Meenakshi Chaudhary… புதிய ரொமான்ஸ் ஜோடி! ❤️🎬

More in Featured

To Top