Connect with us

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடு கிடு உயர்வு – வெளியான லேட்டஸ்ட் தகவல்..!!

Featured

தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிடு கிடு உயர்வு – வெளியான லேட்டஸ்ட் தகவல்..!!

உலக மக்கள் அனைவரையும் கடந்த 4 வருடங்களாக படாதபாடு படுத்திய கொரோனா பெருந்தொற்று சீனாவில் இருந்து முதன் முதலில் பரவ தொடங்கியதாக கூறப்படுகிறது.அங்கு தொடங்கிய அந்த தொற்று படிப்படியாக பரவி கோடான கோடி மக்களை வேட்டையாடியது.

உலக நாடுகளை நடுங்கவைத்த கொரோனா இந்தியாவையும் விட்டுவைக்காமல் அங்கேயும் தலைவிரித்தாடியது இங்கும் பல உயிர்களை கொன்று குவித்த இந்த பெருந்தொற்று இந்த வருடம் சற்று பம்மி இருந்த நிலையில் தற்போது மீண்டும் மெல்ல மெல்ல தலை காட்டி வருகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டிலும் கொரோனா தொற்று தற்போது மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது . அந்தவகையில் தமிழ்நாட்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை தற்போது 123-ஆக உயர்ந்துள்ளது.

இன்று (டிச.23) 21 பேருக்கு கொரோனா தொற்றானது புதியதாக கண்டறியப்பட்டுள்ளதாகவும் . இதில் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆக உள்ளதாகவும் கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 15 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் தமிழ்நாடு சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

Advertisement
 

Trending

 
Advertisement
To Top