Connect with us

கூலி திரைப்படம் தள்ளிப்போகுமா? ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சி..

Featured

கூலி திரைப்படம் தள்ளிப்போகுமா? ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சி..

ரஜினிகாந்தின் நடிப்பில் உருவாகி வரும் இரண்டு படங்கள் கூலி மற்றும் ஜெயிலர் 2. இதில், லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் படம் கூலி. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ரஜினி, நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், உபேந்திரா, சௌபின் ஷாஹிர் போன்ற நட்சத்திரங்கள் இதில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கிறார்.

சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் பிறந்தநாளில் இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி, இணையத்தில் வைரலாகியது. இப்படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் தற்போது, ஆகஸ்ட் மாதம் இப்படம் வெளியாகாததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆகஸ்ட் 14ம் தேதி ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் “வார் 2” படம் வெளியாகும். இதில், ஜூனியர் என்.டி.ஆர், அனில் கபூர், கியாரா அத்வானி ஆகியோர் நடித்துள்ளனர். ரூ. 200 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்தை யாஷ் ராஜ் நிறுவனமே தயாரிக்கிறது.

“வார் 2” படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதால், கூலி படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகின்றது. இதனால், கூலி படத்தை திரையில் பார்க்க ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள் disappointment அடைந்துள்ளனர். இதுவரை, அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  தமிழகத்தில் பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை? சீமான் கருத்து பரபரப்பு

More in Featured

To Top