Connect with us

80களின் கனவுக் கன்னி ரேவதி: லேட்டஸ்ட் போட்டோவில் ரசிகர்கள் ஷாக்!

Featured

80களின் கனவுக் கன்னி ரேவதி: லேட்டஸ்ட் போட்டோவில் ரசிகர்கள் ஷாக்!

80-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர், நடிகை ரேவதி. 1983-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த “மண் வாசனை” திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமான அவர், அடுத்தடுத்து வெற்றி பெற்று, சிறந்த நடிகைக்கான விருது பெற்றார்.

அவருடைய முதலில் படத்தினாலே, ரேவதியின் மார்க்கெட் உயர்ந்தது. பின்னர், தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி சினிமாவில் தொடர்ந்து படங்களில் நடித்து தன் திறமையை வெளிப்படுத்தினார். “மௌன ராகம்”, “புன்னகை மன்னன்”, “கிழக்கு வாசல்”, “தேவர் மகன்”, “மறுபடியும்”, “அஞ்சலி”, “மகளிர் மட்டும்” போன்ற படங்களில் அவரின் நடிப்பும் திறமையும் கணக்கிட முடியாதவை.

நடிகையாக மட்டுமல்ல, இயக்குனராகவும் தனக்கான இடத்தை வகித்தார். தற்போது, ரேவதி மீண்டும் இயக்குனர் அவதாரம் எடுத்து, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒரு வெப் சீரிஸ் இயக்கி வருகிறார்.

இந்த நிலையில், பிரபல சீரியல் நடிகர் அரவிந்த், நடிகை ரேவதியுடன் புகைப்படம் எடுத்துள்ளார். ஆனால், அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், “80களின் கனவுக் கன்னி ரேவதி எவ்வாறு இப்படி ஆகிவிட்டார்?” என்று சோகமாக பார்த்தனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  5 நாட்களில் 'கேங்கர்ஸ்' படத்தின் வசூல்: எவ்வளவு தெரியுமா?

More in Featured

To Top