Connect with us

நான் நடிக்க மாட்டேன் என சொல்லல! சார்லி ஓபன் டாக்..

Featured

நான் நடிக்க மாட்டேன் என சொல்லல! சார்லி ஓபன் டாக்..

நடிகர் சார்லி, தமிழ் சினிமாவில் ஒரு அழகான காமெடி நடிகராக அறிமுகமானவர். 1982-ம் ஆண்டு வந்த “பொய்க்கால் குதிரை” படத்தில் தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு, நகைச்சுவை மட்டுமல்லாமல், பல குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் கலக்கியிருக்கிறார். சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். ஆனால் அதைவிட அவர் நடித்த நாடகங்களின் எண்ணிக்கை 1000-க்கும் அதிகம். இது ஒரு மிகப்பெரிய சாதனை.

ஒரு சமீபத்திய பேட்டியில் அவர் கூறினார்: “அப்போது என்னுடைய கதாபாத்திரத்தை எடுத்துவிட்டால், அந்த படத்திற்கு எந்த பாதிப்பும் வராது. ஆனாலும், பிழைப்புக்காக அந்த மாதிரி படங்களிலும் நடித்தேன்.” “இப்போது தான், என் இல்லாமல் படம் நகராத மாதிரியான கதாபாத்திரங்கள் வருகிறது. அதனால்தான் காமெடியிலிருந்து குணச்சித்திர வேடங்களுக்கு மாறினேன்.”

“நானும் யோகி பாபுவும் கூர்கா படத்தில் நடித்ததைப் பார்த்து, இதுபோல் படங்களில் நடிக்க வேண்டாம் என சொல்கிறார்கள். ஆனால் நான் அப்படி சொல்லமாட்டேன். கடவுள் என்ன கொடுக்கிறாரோ, அதை நான் செய்கிறேன்.” என்று கூறியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “100 நாட்கள் கடந்த ‘காந்தாரா சாப்டர் 1’ – இந்திய சினிமாவின் புதிய சாதனை!”

More in Featured

To Top