Connect with us

ஆந்திராவில் ஆட்சியை பிடித்த சந்திரபாபு நாயுடுவுக்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து..!!

Featured

ஆந்திராவில் ஆட்சியை பிடித்த சந்திரபாபு நாயுடுவுக்கு த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து..!!

ஆந்திராவில் வரலாறு காணாத வெற்றி பெற்று ஆட்சியை அமைக்க இருக்கும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திர பாபு நாயுடுவுக்கு நடிகரும், தமிழக வெற்றி கழகத் தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில் இன்று நாடு முழுவதும் வாக்கு என்னும் பணி வெற்றிகரமாக நடைபெற்றது.

இதில் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்ந்து ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம் ,சிக்கிம் ஆகிய நான்கு மாநில சட்டமன்ற தேர்தல்களும் நடைபெற்றன . ஆந்திராவை பொருத்தவரை ஆரம்பம் முதல் தெலுங்கு தேசம் பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வந்தது .

ஆந்திராவில் மொத்தம் 175 சட்டப்பேரவை தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இதில் 88 இடங்களை வெல்லும் கட்சி ஆட்சியைப் பிடிக்கும்.

அந்தவகையில் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி 120 இடங்களில் முன்னிலை வகித்து வரும் நிலையில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 22 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது பாஜக 6 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.

இந்நிலையில் ஆந்திர சட்டமன்ற தேர்தலில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடந்த தேர்தலை விட 100 இடங்களுக்கு மேல் இந்த முறை இழந்துள்ள நிலையில் .இந்த தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது.

இதையடுத்து ஜூன் 9 தேதி சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநில முதல்வராக மீண்டும் அரியணையில் அமர உள்ளார்.

இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் சந்திரபாபு நாயுடுவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் தற்போது நடிகரும், தமிழக வெற்றி கழகத் தலைவருமான விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ள சந்திரபாபு நாயுடு அவர்களுக்கும், ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.

உங்கள் தொலைநோக்கு தலைமையின்கீழ் ஆந்திர மக்கள் பெரும் முன்னேற்றம் அடைய வாழ்த்துகிறேன் என விஜய் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  'கூலி' படத்தில் தலைவர் கதாபாத்திரத்தின் பெயர் என்ன தெரியுமா..? சஸ்பென்ஸ் வைத்த படக்குழு..!!

More in Featured

To Top