Connect with us

மத்திய சிறையில் அமைச்சர்களுக்கு என ஒரு தனி கட்டிடம் தேவைப்படும் – அண்ணாமலை விமர்சனம்

Featured

மத்திய சிறையில் அமைச்சர்களுக்கு என ஒரு தனி கட்டிடம் தேவைப்படும் – அண்ணாமலை விமர்சனம்

ஊழலின் ஊற்று, இன்று சுக்குநூறாக உடைந்து நொறுங்கி உள்ளதாக தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் சிறை தண்டனை குறித்து விமர்சிக்கும் வகையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சொத்துகுவிப்பு வழக்கில் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது .

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பி குறித்து கருத்து தெரிவித்துள்ள அண்ணாமலை கூறியதாவது :

மக்களின் வரிப் பணத்தை விஞ்ஞானப்பூர்வமாக மோசடி செய்யும் கலையில் பட்டம் பெற்றுள்ள ஊழலின் ஊற்று, இன்று உடைந்து நொறுங்கியிருக்கிறது. ஏற்கனவே ஒரு அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருக்கையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்புக்கு பின், மற்றொரு அமைச்சர் பொன்முடி, அவருடன் சிறையில் இணைகிறார்.

திமுக அமைச்சர்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள எண்ணற்ற ஊழல் வழக்குகளைக் கணக்கில் கொள்ளும்போது, மத்திய சிறையில், மு.க.ஸ்டாலின் அமைச்சர்களுக்கு என ஒரு தனி கட்டிடம் தேவைப்படும் போலத் தெரிகிறது என கடுமையாக விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  2026 தேர்தலுக்குத் தயாராகும் அதிமுக — கூட்டணிக்காக கையேந்தியும், மூன்றாம் இடமே நிச்சயம்! ஓபிஎஸ் அதிரடி விமர்சனம்

More in Featured

To Top