Connect with us

அதிரடியில் மிரட்ட வரும் கேப்டன் மில்லர் – வெளியீட்டு தேதியை அறிவித்தது படக்குழு..!!

Cinema News

அதிரடியில் மிரட்ட வரும் கேப்டன் மில்லர் – வெளியீட்டு தேதியை அறிவித்தது படக்குழு..!!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கும் கேப்டன் மில்லர் படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் இருக்கும் பல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தற்போது வேற லெவலில் உருவாகி உள்ள திரைப்படம் படம் தான் கேப்டன் மில்லர்.

பெரும் பொருட்செலவில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க முக்கிய கதாபாத்திரங்களில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் சந்தீப் கிஷான், நிவேதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் . மேலும் இப்படத்திற்கு GV பிரகாஷ் இசையமைத்துள்ளார் .

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் உருவாகி உள்ள நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி இத்திரைப்படம் ஜனவரி மாதம் 12-ம் தேதி வௌியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும், படத்திற்கு தணிக்கைக்குழு யுஏ சான்றிதழ் வழங்கி உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஒவ்வொரு காட்சியும் தரம் - வெளியானது கவினின் ஸ்டார் படத்தின் ட்ரைலர்..!!!

More in Cinema News

To Top