Connect with us

யஷின் ‘Toxic’ ரிலீஸ் தள்ளிப்போனது ஏன்?

Cinema News

யஷின் ‘Toxic’ ரிலீஸ் தள்ளிப்போனது ஏன்?

‘Toxic: A Fairytale for Grown-ups’ திரைப்படம் தற்போது இந்திய சினிமாவின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாக மாறியுள்ளது. Yash நடிப்பில் உருவாகும் இந்த கேங்ஸ்டர் எபிக் படத்தில் Kiara Advani, Nayanthara உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முதலில் 2026 ஜூன் 4ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இந்த படம், உலகளாவிய விநியோக கூட்டாளர்களுடன் இணைந்து மிகப்பெரிய ரிலீஸுக்காக தேதி மாற்றப்பட்டுள்ளது.

2026 CinemaCon நிகழ்ச்சியில், அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் ஒன்பது நிமிட சிறப்பு காட்சியை படக்குழு வெளியிட்டது. அந்த preview பார்த்த விநியோகஸ்தர்கள், கோவா underworld பின்னணியில் அமைந்த இந்த கதையின் scale மற்றும் visual grandeur-ஐ பாராட்டியுள்ளனர். கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே நேரத்தில் உருவாகும் இந்த படம், இந்திய சினிமாவை உலக மேடைக்கு கொண்டு செல்லும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

Yash இந்த படத்தில் நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் செயல்படுகிறார். K.G.F: Chapter 2 வெற்றிக்குப் பிறகு, “Toxic” மூலம் இன்னும் பெரிய சர்வதேச தாக்கத்தை உருவாக்க வேண்டும் என்பதே அவரது நோக்கம் என கூறப்படுகிறது. ரசிகர்களும் இந்த தாமதத்தை பொறுமையாக ஏற்றுக்கொண்டு, ஒரு மிகப்பெரிய cinematic experience-ஐ எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top