Connect with us

நான் பிசினஸ் வுமன் அதனால் மேடம்.. கலா மாஸ்டரிடம் ரம்பா சொன்ன அந்த விசேஷம்..

Featured

நான் பிசினஸ் வுமன் அதனால் மேடம்.. கலா மாஸ்டரிடம் ரம்பா சொன்ன அந்த விசேஷம்..

“அழகிய லைலா, அது இவளது ஸ்டைலா” என்ற பாடல் கேட்டாலே ரசிகர்கள் கொண்டாட்டம் அடைந்துவிடுவார்கள். அந்த அளவிற்கு, இந்த பாடலில் ரம்பா ஆடிய நடனம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்துள்ளது.

90 காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம், பெங்காலி, போஜ்புரி என பல மொழிகளில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ரம்பா, திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி இருந்தார். ஆனால், திருமணத்திற்கு பின் சமையலறையை எப்படி உருவாக்குவது என்ற படிப்பினை படித்துள்ளார். அதை தொழிலாகவும் செய்து வருகிறார். தற்போது, ஜோடி ஆர் யூ ரெடி சீசன் 2 – ல் நடுவராக வலம் வருகிறார் ரம்பா. அந்த நிகழ்ச்சியில், நடன இயக்குநர் கலா மாஸ்டர் ரம்பாவை “மேடம்” எனக் குறிப்பிட்டார்.

ஆனால், ரம்பா அதற்கு பதிலளித்தபோது, “எந்த பிசினஸ் வுமனும் தன்னை ‘மேடம்’ என்று அழைப்பதை விரும்பமாட்டார்கள். அவர்கள் தங்களை அவர்களது பெயர் கொண்டு அடையாளப்படுத்த வேண்டும். எனவே, நீங்கள் என்னை ‘மேடம்’ என்று அழைக்கத் தேவையில்லை. ‘ரம்பா’ என்று அழைத்தாலே போதும்” என்று கூறினார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கேரவனில் தனுஷ் நடந்துகொள்ளும் விதத்தை பற்றி அமலா பால் என்ன சொன்னார் தெரியுமா?

More in Featured

To Top