Connect with us

விஜய்யை தொடர்ந்து ரஜினியுடன் இணையும் ஹெச். வினோத்.. மாஸ் அப்டேட் வெளியானது!

Featured

விஜய்யை தொடர்ந்து ரஜினியுடன் இணையும் ஹெச். வினோத்.. மாஸ் அப்டேட் வெளியானது!

தமிழ் சினிமாவில் தனி அடையாளம் கொண்ட இயக்குநர் ஹெச். வினோத் தற்போது தளபதி விஜய்யுடன் ஜனநாயகன் படத்தை இயக்கி வருகிறார். இது ஹெச். வினோத்துக்கும் விஜய்க்கும் இடையே முதல் கூட்டணி. மேலும், இது தான் விஜய்யின் கடைசி திரைப்படமாக இருக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இப்படம் முடிந்ததும், ஹெச். வினோத் சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்து கதை கூறியதாக கூறப்படுகிறது. அந்த கதை ரஜினிக்கும், அவரின் மகள் சௌந்தர்யாவிற்கும் மிகவும் பிடித்திருக்கிறதாம். அதனால், ஜெயிலர் 2 படத்துக்குப் பிறகு, ஹெச். வினோத் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

இதற்கிடையில், வீர தீர சூரன் பட இயக்குநர் அருண் குமாரும் சமீபத்தில் ரஜினியை சந்தித்து புதிய கதையை கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. யாரின் கதை ரஜினியை கவரும்? அவரின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார்? பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஹீரோவாகும் பிக் பாஸ் ராஜு… அஜித், விஜய் பட இயக்குனருடன் கூட்டணி..

More in Featured

To Top