Connect with us

காதலியை கொன்றுவிட்டு ஸ்டேட்டஸ் வைத்த கொடூர காதலன் – சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

Featured

காதலியை கொன்றுவிட்டு ஸ்டேட்டஸ் வைத்த கொடூர காதலன் – சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

ஆசை ஆசையை காதலித்த கேரளாவை சேந்த இளம் பெண்ணை சென்னையில் கொடூரமாக கொன்றுவிட்டு அதனை ஸ்டேட்டஸ் வைத்த காதலனின் செயல் செயல் பெரும் பரப்ரபை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை குரோம்பேட்டையில் தனியார் விடுதி அறையில் கேரளாவைச் சேர்ந்த நர்சிங் மாணவி பவுசியா (20) கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் . அறையில் ஆசிக் (20) என்பவர் பவுசியா உடன் தங்கிய நிலையில் கொலை நடந்துள்ளதாக கூறப்படுகிறது .

இந்நிலையில் கேரளாவை சேர்ந்த ஆசிக் பவுசியாவின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அதனை தன் செல்போனில் ஸ்டேடசாகவும் வைத்துள்ளார் . அந்த ஸ்டேட்டஸ் பவுசியாவின் தோழிகள் உடனே விடுதிக்கு வந்து பார்த்தபோது அவர் பிணமாக கிடந்துள்ளார் .

இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குரோம்பேட்டை போலீசார் பவுசியாவின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அதே சமயம் கொலை செய்ததாக கூறப்படும் ஆசிக்கை பல்லாவரம் ரயில் நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.இதையடுத்து ஆசிக் இடம் தற்போது போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பல வருடங்களாக ஆசை ஆசையாக காதலித்த காதலியை கொன்றது மட்டுமில்லாமல் அதனை செல்போனில் ஸ்டேடசாக வைத்த காதலனின் கொடூர செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Featured

To Top