Connect with us

பாலிவுட் இயக்குநரின் மோசடி: காதலிப்பதாகக் கூறி பாலியல் வன்முறையும் கருக்கலைப்பும்!

Cinema News

பாலிவுட் இயக்குநரின் மோசடி: காதலிப்பதாகக் கூறி பாலியல் வன்முறையும் கருக்கலைப்பும்!

மும்பை திரையுலகில் நடந்த இந்த சம்பவம், இந்திய சினிமா உலகில் பெண்கள் எதிர்கொள்ளும் சீரழிவுகளை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. சமீபத்தில் தமிழ் சின்னத்திரையில் நடந்த ஆடிஷன் சர்ச்சை அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இப்போது பாலிவுட்டில் நடந்த ஒரு சம்பவம் பெரிய பரபரப்பை உருவாக்கியுள்ளது.

இணையம் வளர்ந்ததன் பின்னர், சமூக வலைதளங்களில் பிரபலமடைந்து திரையுலகில் வாய்ப்பு தேடும் பலர் உள்ளனர். இப்படியான சூழலில், பாலிவுட் இயக்குநர் ஒருவர் சமூக வலைதளத்தில் பிரபலமான ஒரு பெண்ணின் தொடர்பு எண்ணை பெற்றுவிட்டார். முதலில் நட்பாக தொடர்பு கொண்ட அவர், பின்னர் அவளை ஒரு ஆடிஷனுக்கு அழைத்தார். நடிகையாக தேர்வு செய்ததாகக் கூறி தொடர்ந்து தொடர்பில் இருந்தார்.

ஒருநாள், அந்த பெண்ணை ரயில் நிலையத்திற்கு வருமாறு சொல்லிய அவர், மறுத்த பிறகு “நான் போதையில் இருக்கிறேன், நீ வரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன்” என மிரட்டினார். பயந்த அந்த பெண் சென்றபோது, அவரை ஒரு ரெசார்ட்டில் தங்கிவிட்டு செல்லச் சொல்லினார். நம்பிய பெண் அவனை அறையில் விட்டுவிட்டு செல்வதற்குத் தயாரான போது, இயக்குநர் அவரை கட்டிப்பிடித்து, பாலியல் வன்புணர்வு செய்தார்.

போதை தெளிந்த பின்னர், “நீ அழுக வேண்டாம், உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்” எனக் கூறி, மேலும் பலமுறை வன்புணர்வு செய்தார். கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேல் அந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்து, “தயாரிப்பாளருக்கும் எனக்கும் இடையில் பிரச்னை ஏற்பட்டுவிட்டது, படம் டிராப் ஆகிவிட்டது” எனக் கூறி, அவரை கழட்டிவிட்டார்.

இதற்கிடையில், அந்த பெண் மூன்று முறை கருக்கலைப்பு செய்துள்ளார். இப்போது, அந்த இயக்குநர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை தெரிந்து கொண்ட அவர், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக, காவலர்கள் இயக்குநரை பிடித்து கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

“பாலிவுட்டில் 10 படங்களை இயக்கிய ஒரு இயக்குநர் பார்க்கும் வேலையா இது?” என தெரிந்தவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த சம்பவம் மீண்டும் ஒரு முறை, சினிமா உலகில் பெண்களின் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளை எழுப்பி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  அஜித் கூறிய உண்மை: மனைவி ஷாலினி செய்த தியாகம்!

More in Cinema News

To Top