Connect with us

தோல்விக்கு முன்னுரை பாடத் தொடங்கிவிட்டார்கள் பா.ஜ.க. வேட்பாளர்கள் – கி.வீரமணி அட்டாக்

Featured

தோல்விக்கு முன்னுரை பாடத் தொடங்கிவிட்டார்கள் பா.ஜ.க. வேட்பாளர்கள் – கி.வீரமணி அட்டாக்

தோல்விக்கு பா.ஜ.க. வேட்பாளர்கள் முன்னுரை பாடத் தொடங்கிவிட்டார்கள் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கி.வீரமணி வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

“தங்களுக்குத் தோல்வி உறுதி என்றவுடன், வாய்ப்பறை கொட்டிய கோவை பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலை, தென்சென்னை பா.ஜ.க. வேட்பாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராசன், மத்திய சென்னை பா.ஜ.க. வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் போன்றவர்கள் புதுப்புது வாதங்களைக் கூறி, ‘ஒப்பாரி’ வைத்துப் பேட்டி தந்ததைப் பார்த்தபோது, எப்படி சிரிப்பது என்றே தெரியவில்லை.

குற்றம் சுமத்தி, தோல்விக்கு இப்போதே அச்சார சமாதானங்கள் சொல்லக் கிளம்பியுள்ள காவிகளே, உங்களுக்கு ஒரே கேள்வி! தேர்தல் ஆணையம் யாருடைய அதிகாரத்தின்கீழ்? ஒன்றிய அரசின்கீழா? அல்லது மாநில அரசின் கீழ் இயங்குகிறதா? இந்தியாவில் மூன்று தேர்தல் ஆணையர்களையும் நியமித்தது யார்? முன்பே நீங்கள், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா போன்றவர்களிடம் இதுபற்றி பகிரங்கமாகப் பேசினீர்களா?

அறிஞர் அண்ணாவின் எழுத்தோவியத் தலைப்புதான் நினைவிற்கு வருகிறது. ‘‘ஆரம்பத்தில் ‘அடானா’ (மகிழ்ச்சி ராகம்), முடிவில் ‘முகாரி’ (துன்பப் பாட்டு).’’ தோல்விக்கு முன்னுரை பாடுவதாகவே விவரம் அறிந்தவர்கள் புரிந்துகொள்கிறார்கள். அந்தோ பரிதாபம்! இதற்கேது மக்கள் அனுதாபம்? என கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அனல்பறக்க நேற்று நடைபெற மக்களவை தேர்தலில் கடந்த தேர்தலை விட இம்முறை அதிக வாக்கு பதிவு நடந்திருப்பதால் இதில் யார் யார் வெற்றி பெற போகிறார்கள் என்ற ஆர்வம் வாக்காளர்கள் மத்தியில் ஏகபோகமாக நிலவி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “Thalapathy Salary Journey! 💥 ரூ.500 குழந்தை நட்சத்திரம் → ரூ.275 கோடி ஸ்டார்”

More in Featured

To Top