Connect with us

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய IPL நிர்வாகம் – சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு அபராதம்..!!!

Featured

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சிய IPL நிர்வாகம் – சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு அபராதம்..!!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ருதுராஜ் கைவாட்டுக்கு IPL நிர்வாகம் எச்சரிக்கையுடன் கூடிய அபராதத்தை விதித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது .

இதில் லக்னோவில் உள்ள உலக புகழ் பெற்ற கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் LSG – CSK அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்களைச் சேர்த்தது.

இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ சூப்பர் கெய்ன்ட்ஸ் அணி பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கேப்டன் கே.எல்.ராகுல் மற்றும் டிகாக் தங்களது அதிரடியான ஆட்டத்தால் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர் .

கடைசி 2 ஓவர்களில் லக்னோவின் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 6 பந்துகள் எஞ்சி இருந்த நேரத்தில் நிகோலஸ் பூரான் அதிரடியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ அணி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மெதுவாக பந்து வீசியதற்காக கேப்டன் ருதுராஜ்க்கு ருபாய் 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றுள்ள ருதுராஜ் கைவாட்டுக்கு IPL நிர்வாகம் முதல் முறையாக எச்சரிக்கையுடன் கூடிய அபராதம் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்துவீசியதற்காக மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ருபாய் 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஊழலை எதிர்த்து நின்றால் கைது செய்வீர்களா..? - கொதிக்கும் அன்புமணி

More in Featured

To Top