Connect with us

“5ஆவது முறையாக கேப்டன்சி டாஸ்கில் தோல்வி! கதறி அழும் ஜோவிகா!”

Bigg Boss Tamil Season 7

“5ஆவது முறையாக கேப்டன்சி டாஸ்கில் தோல்வி! கதறி அழும் ஜோவிகா!”

பிக் பாஸ் வீட்டில் கேப்டன் டாஸ்க்கில் நான்கு முறை கலந்துகொண்டு தோல்வி அடைந்த நிலையில் இந்த முறையும் தோல்வி அடைந்ததை அடுத்து, அந்த போட்டியாளர் கதறியழுத காட்சியின் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பிக் பாஸ் வீட்டில் ஒவ்வொரு வார இறுதியிலும் அடுத்த வாரத்திற்கான கேப்டன் டாஸ்க் வைக்கப்படும். அதில் தேர்வு செய்யும் போட்டியாளர்கள் கேப்டனாக முயற்சி செய்வார்கள்.

அந்த வகையில் இந்த வார கேப்டன் டாஸ்க்கில் விஷ்ணு, ஜோவிகா மற்றும் நிக்சன் ஆகிய மூவரும் போட்டியிடுகின்றனர். மூவரும் கேப்டன் ஆக வேண்டும் என்ற பரபரப்பில் விளையாடிய நிலையில் எதிர்பாராத வகையில் ஜோவிகா இந்த முறையும் தோல்வி அடைந்து விட்டார்.

ஏற்கனவே நான்கு முறை அவர் கேப்டன் டாஸ்க்கில் கலந்து கொண்டு தோல்வி அடைந்த நிலையில் ஐந்தாவது முறையும் தோல்வி அடைந்ததை அடுத்து அவர் மனம் வருந்தி கதறி அழுதார். இதனை அடுத்து சக போட்டியாளர்கள் அவருக்கு ஆறுதலளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நிக்சன் மற்றும் விஷ்ணு ஆகிய இருவருக்கும் இடையே கடும் போட்டி நடந்த நிலையில் விஷ்ணு ஜெயித்து விட்டது போன்று இன்றைய ப்ரோமோ வீடியோவில் இருந்து தெரிய வருகிறது. அடுத்த வாரம் விஷ்ணுவின் கேப்டன்ஷிப்பில் அதிரடி இருக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Bigg Boss Tamil Season 7

Advertisement
 

Trending

 
Advertisement
To Top