Connect with us

மாரி நமக்கு கிடைச்ச பெரிய பொக்கிஷம் – வாழை படத்தை மனதார பாராட்டிய பாரதிராஜா..!!

Cinema News

மாரி நமக்கு கிடைச்ச பெரிய பொக்கிஷம் – வாழை படத்தை மனதார பாராட்டிய பாரதிராஜா..!!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள வாழை திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் நிலையில் தற்போது இப்படத்தை இயக்குனரும் நடிகருமான பாரதிராஜா மனதார பாராட்டி உள்ளார்.

இதுகுறித்து பாரதிராஜா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறிருப்பதாவது :

சினிமா துறைக்கு வந்ததே புண்ணியம் என சில படங்களைப் பார்த்து யோசித்தது உண்டு. ‘வாழை’ அப்படியொரு படம். படத்தை பார்த்து பல இடங்களில் கண்ணீர் விட்டேன். ஒப்பனைகள் இல்லாத முகம், சுத்தமில்லாத தெருக்கள், என அச்சு பிசகாமல் நம் கிராமங்களை கண் முன் கொண்டு வந்திருக்கிறார். மண்ணிலிருந்து மக்களை எடுத்து நடிக்க வைத்திருக்கிறார். மாரி, நமக்கு கிடைச்ச பெரிய பொக்கிஷம்.

சத்யஜித் ரே, ஷியாம் பெனெகல், படங்களைப் பார்க்கையில் பொறாமையாக இருக்கும். அப்படியான படங்களை எடுக்க தமிழனுக்கு தகுதி இல்லையா என ஆதங்கப்படுவேன். ஆனால், இவர்களையெல்லாம் விஞ்சுகிற வகையில், என் நண்பன், என் மாரி செல்வராஜ் அற்புதமாக படத்தை எடுத்திருக்கிறார். எங்களிடம் ஒரு மாரி செல்வராஜ் இருக்கிறார் என மார்தட்டி சொல்வேன்தெரிவித்துள்ளார் .

இதையடுத்து பாரதிராஜாவின் பாராட்டிற்கு தனது சமூக வலைதள பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ள மாரி செல்வராஜ் கூறிருப்பதாவது :

நிறைய தருணங்கள் என்னை பற்றியான உங்கள் சொற்களில் நின்று இளைப்பாறி இருக்கிறேன். இன்று நானே ஒரு செடியாய் துளிர்க்கிறேன். இயக்குநர் இமயத்திற்கு நன்றி என மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top